ராஜ்பவன் அருகே கார்களுக்கு தீ வைப்பு
ராஜ்பவன் அருகே கார்களுக்கு தீ வைப்பு
ராஜ்பவன் அருகே கார்களுக்கு தீ வைப்பு
ADDED : செப் 22, 2011 02:14 AM
சென்னை:ராஜ்பவன் அருகே மூன்று கார்கள் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாகின.
மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து விட்டுச் சென்றார்களா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை, கிண்டி ராஜ்பவன் அருகே, ராஜ்பவன் காலனி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதே சமயம், காலனியின் எதிரேயுள்ள குதிரை லாயத்தில் இருந்த இரண்டு கார்களின் கவர்கள், தீப்பிடித்து எரியத் தொடங்கின. காவலாளிகள், கார் கவரை அகற்றி, காருக்கு அதிக சேதாரம் இல்லாமல் காப்பாற்றினர். ராஜ்பவன் காலனியில் தீப்பிடித்த கார் மட்டும், எலும்புக்கூடாக மாறியது.
சென்னையில், முன்பு வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. தொடர்கதையாக நடந்த தீப்பிடிப்பு சம்பவம், சில காலமாக குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று, கிண்டியில் கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்தது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***