/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு "கத்திகுத்து' கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சிதிருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு "கத்திகுத்து' கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு "கத்திகுத்து' கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு "கத்திகுத்து' கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு "கத்திகுத்து' கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சி
ADDED : செப் 13, 2011 10:15 PM
காரைக்குடி : திருமணத்திற்கு மறுத்த நர்சை கத்தியால் குத்திய காதலன், அதே கத்தியால் தன்னையும் குத்திக் கொண்டு, பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிறுகவயலை சேர்ந்த கூலி தொழிலாளி சிதம்பரம் மகள் சங்கீதபிரியா, 22. 'டிப்ளமோ' நர்சிங் படித்துள்ள இவர், காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவரும், தேவகோட்டை அருகே வேலாயுத பட்டணத்தை சேர்ந்த நாகையா மகன் ராமச்சந்திரனும்,26,கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர்கள், இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால், ரகசிய திருமணம் செய்து கொள்ள காதலியிடம் ராமச்சந்திரன் வற்புறுத்தியுள்ளார். இதற்கு உடன்படாத சங்கீதபிரியாவை தீர்த்து கட்ட எண்ணிய ராமச்சந்திரன், இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தார்.கத்திக்குத்து: நேற்று முன்தினம் சங்கீதபிரியா பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்ற ராமச்சந்திரன், பணி இடைவெளியின் போது, வெளியே வந்த சங்கீதபிரியாவிடம், திருமணத்திற்கு ராமச்சந்திரன் வலியுறுத்தினார். சங்கீதபிரியா சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் சங்கீதபிரியாவின் வயிறு, கழுத்து உட்பட நான்கு இடங்களில் குத்தினார். சங்கீதபிரியாவின் அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்தனர். ராமச்சந்திரன் தப்பியோடினார். சிலை பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு முத்துராமலிங்கம், ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தார். அப்போது, அவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு, கத்தியால் தன்னைத்தானே வயிற்றில் குத்தி, தற்கொலைக்கு முயன்றார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், சங்கீதபிரியா காரைக்குடி அருகே மானகிரியில் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ., ராஜசேகர் விசாரிக்கிறார்.