Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/7ம் ஆண்டு துவக்க விழா தே.மு.தி.க., குதூகலம்

7ம் ஆண்டு துவக்க விழா தே.மு.தி.க., குதூகலம்

7ம் ஆண்டு துவக்க விழா தே.மு.தி.க., குதூகலம்

7ம் ஆண்டு துவக்க விழா தே.மு.தி.க., குதூகலம்

ADDED : செப் 16, 2011 12:26 AM


Google News

மணப்பாறை: மணப்பாறை நகர தே.மு.தி.க., சார்பில் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.

முன்னதாக பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து தே.மு.தி.க.,வினர் இருசக்கர வண்டிகளில் நகர முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக விராலிமலை ரோட்டில் உள்ள அண்ணா நகரில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. திருச்சி மாவட்ட பொருளாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தலைமை வகித்து கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் வசந்த் பெரியசாமி முன்னிலை வகித்தார். விழாவில், நகரச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் தொப்பம்பட்டி சரவணன், நகர அவைத்தலைவர் பாலன், பொருளாளர் பொன்சின்னச்சாமி, முன்னாள் நகர செயலாளர் தீரன்குமரேசன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் சிவசுப்ரமணி, நெசவாளர் அணி துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், நகர துணைச் செயலாளர்கள் டேனியல், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாகுல், விஜயகுமார், வஜ்ரவேல், சின்னச்சாமி, தீபம்சக்திவேல், மகளிரணி நகர நிர்வாகிகள் வள்ளி, கல்பனா, முத்துலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின் அண்ணாதுரை, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் கட்சியினர் ரத்ததானம் வழங்கினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us