ADDED : ஆக 05, 2011 01:34 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுதிறனாளிகளுக்கான
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி அரசு
மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற
பகுதிகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அவர்களுக்கான சலுகைகள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்த தேசிய அடையாள அட்டை
வழங்கப்படும்.ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குறைகள் குறித்து
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்
வழங்கப்படுகிறது. இங்கு டாக்டர்கள் மாற்று திறனாளிகளை பரிசோதனை செய்து
சான்றிதழை வழங்கினர், என்றனர்.