/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மருத்துவ அதிகாரியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கைமருத்துவ அதிகாரியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
மருத்துவ அதிகாரியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
மருத்துவ அதிகாரியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
மருத்துவ அதிகாரியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற
மருத்துவ அதிகாரியை தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க நிர்வாகிகள்
சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அதிகாரியாக
பணி புரிந்த வெங்கட்ராமன் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துமனைக்கு
மாற்றப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருச்சியில் பணி புரிந்த உலகநாதன் இங்கு
மாற்றலாகி பொறுப்பேற்றார். தட்சிண ரயில்வே எம்ப் ளாயீஸ் யூனியன்
நிர்வாகிகள் கிளை செயலாளர் மூர்த்தி தலைமையில் டாக்டர் உலகநாதனை சந்தித்து
வாழ்த்து தெரிவித்தனர். தலைவர் இந்திரகுமார், பொருளாளர் தங்கவேல், உதவி
தலைவர் உசேன், உதவி செயலாளர் ஜேசுராஜ், பெருமாள், துரை, மும்மூர்த்தி,
காலனி கமிட்டி ஸ்ரீதர், செல்வராஜ் உடனிருந்தனர். மருத்துவ மனைக்கு
சுகாதாரமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். அறுவை சிகிச்சை வசதி செய்ய
வேண்டும். கண் பரி சோதனை முகாம் அடிக்கடி நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள்
குறித்து வலியுறுத்தினர்.