/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்ட பஞ்., 14வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் சாமிநாதன் தீவிர பிரச்சாரம்மாவட்ட பஞ்., 14வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் சாமிநாதன் தீவிர பிரச்சாரம்
மாவட்ட பஞ்., 14வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் சாமிநாதன் தீவிர பிரச்சாரம்
மாவட்ட பஞ்., 14வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் சாமிநாதன் தீவிர பிரச்சாரம்
மாவட்ட பஞ்., 14வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் சாமிநாதன் தீவிர பிரச்சாரம்
ADDED : அக் 02, 2011 12:38 AM
பெருந்துறை: ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாமிநாதன் (66 ) தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.பெருந்துறை, திங்களூர் அருகிலுள்ள அப்பிச்சிமார் மடத்தைச் சேர்ந்த இவர், பி.எல்.ஓ. மற்றும் எம்.ஏ., படித்துள்ளார்.அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் மன்ற செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், 1986ல் பஞ்சாயத்து தலைவர், 1988ல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர், பஞ்சாயத்து தலைவர்கள் சங்கப் பொருளாளர், யூனியன் பணிக் குழுத் தலைவர், 1988ல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குநர், 1996ல் பெருந்துறை யூனியன் துணைத் தலைவர், பெருந்துறை யூனியன் கவுன்சிலர், 2001ல் பெருந்துறை யூனியன் தலைவர் பதவிக்கான வேட்பாளர், 2006ல் மாவட்ட பஞ்சாயத்து 15வது வார்டு வேட்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.அ.தி.மு.க.வில் 1972 முதல் உறுப்பினர், கிளை செயலாளர், பெருந்துறை ஒன்றிய அவைத் தலைவர். பெருந்துறை ஒன்றிய செயலாளர், ஈரோடு புறநகர் மாவட்ட விவசாய பிரிவு தலைவர், ஈரோடு மாநகர் மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர், 1998 முதல் பெருந்துறை தொகுதி தேர்தல் பணிக் குழு உறுப்பினர், ஊராட்சி செயலாளர் ஆகியவை, இவர் அ.தி.மு.க.வில் வகித்த பதவிகள். தற்போது, ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக உள்ளார்.
கடந்த 1991ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியை கலைக்க கோரி சிறை சென்றார். 1996ல் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்தபோது சிறை சென்றார். 2000ல் பிளசன்ட் ஹோட்டல் தீர்ப்பின் போதும், 2000ல் டான்ஸி நிலத் தீர்ப்பின்போதும், 2007ல் கருணாநிதி கொடும்பாவி எரிப்பு வழக்கிலும் சிறை சென்றுள்ளார்.தற்போது, ஈரோடு மாவட்ட பஞ்சாயத்தின், 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். தனது பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.


