ADDED : ஆக 11, 2011 11:04 PM
திட்டக்குடி : பணிக்காலத்தில் இறந்த கிராம ஊழியரின் மனைவிக்கு குடும்ப நலநிதி வழங்கப்பட்டது.
திட்டக்குடி அடுத்த கிளிமங்கலம் கிராமத்தில் கிராம ஊழியராக பணிபுரிந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் தனது பணிக்காலத்தின் போது இறந்தார். இவரது மனைவி அஞ்சலைக்கு தமிழக அரசின் குடும்ப நல திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. திட்டக்குடி தாசில்தார் சையத் ஜாபர் இதற்குரிய காசோலையை அஞ்சலையிடம் வழங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் பாலு, கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார்கள் ராஜா, மகாராணி, கிராம ஊழியர் சங்கத் தலைவர் கந்தசாமி, அலுவலக உதவியாளர் சங்கத் தலைவர் கோடி, சக்திவேல் உடனிருந்தனர்.