/உள்ளூர் செய்திகள்/கரூர்/லாலாப்பேட்டையில் கல்லூரிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்லாலாப்பேட்டையில் கல்லூரிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
லாலாப்பேட்டையில் கல்லூரிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
லாலாப்பேட்டையில் கல்லூரிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
லாலாப்பேட்டையில் கல்லூரிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
ADDED : ஆக 03, 2011 01:18 AM
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே கல்லூரி பஸ் திடீரென கவிழ்ந்ததில் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
லாலாப்பேட்டை பகுதியிலிருந்து நேற்று காலை 8 மணியளவில் கரூர் கல்லூரி பஸ்ஸில் மாணவ, மாணவியரை அழைத்துக் கொண்டு கரூருக்கு சென்றது. பஸ்ஸை கல்யாண சுந்தரம் என்பவர் ஓட்டினார். பழைய கரூர் - திருச்சி மெயின் ரோடு லாலாப்பேட்டை மேம்பாலம் பகுதியில் முன்னால் சென்ற மணல் மாட்டு வண்டியை கடந்த போது, பஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் ஹேமா (17), கவிதா (18), ஐஸ்வர்யா (18), ஹேமலதா (18), புஷ்பவள்ளி (19), சாந்தி (18), பூபதி (18), ராம்குமார் (23), அசோக்குமார் (23) மற்றும் பஸ் டிரைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் நிறைமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.லாப்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.