16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவன்சி.பி.ஐ.,யின் தீவிர விசாரணையால் கண்டுபிடிப்பு
16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவன்சி.பி.ஐ.,யின் தீவிர விசாரணையால் கண்டுபிடிப்பு
16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவன்சி.பி.ஐ.,யின் தீவிர விசாரணையால் கண்டுபிடிப்பு

சென்னை:ராமநாதபுரத்தில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவனை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சென்னை சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்து, தந்தையிடம் ஒப்படைத்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரைச் சேர்ந்தவர் சயீது; கார் டிரைவர்.
அப்பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் இந்தியாவிற்கு அழைத்து வந்த சயீது, தன் சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1994ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்தியா வந்தபோது, ஆண் குழந்தை(காணாமல் போன சிறுவன்) பிறந்தது. குழந்தை பிறந்த நிலையில், வேலை காரணமாக சயீது வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில், தன் மகளைத் தேடி இந்தியா வந்த ஷேக், எப்படியோ, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டார். அங்கு சென்ற அவர், மகளை அழைத்துச் சென்றார். ஆறு மாத குழந்தையான சயீதின் மகனுக்கு பாஸ்போர்ட் இல்லை. அதனால், அங்குள்ள ஒருவரிடம் விட்டுச் சென்று விட்டார். சயீதின் மனைவி, அவருக்குத் தகவல் ஏதும் தெரிவிக்காமல், தன் நாட்டிற்குச் சென்று, பெற்றோருடன் இணைந்து கொண்டார்.
மனைவியால் நிர்கதியாக விடப்பட்ட சயீது, இந்தியா திரும்பினார். மனைவியுடனான தொடர்புகளையும் இழந்த நிலையில், தன் குழந்தையை தேடிப்பார்த்தார்; கிடைக்கவில்லை. மனைவி, அவரது பெற்றோரின் சில நடவடிக்கைகளால், சயீது பல இடங்களில் முயன்றும் பலனேதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, கடந்த 1996ல் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள், 2000ம் ஆண்டு வரை தேடியும் கிடைக்கவில்லை என்று கைவிரித்தனர். ஐகோர்ட்டிற்குச் சென்ற நிலையில், அங்கும் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2000ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினார் சயீது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி, சி.பி.ஐ., விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.தொடர்ந்து, சென்னை,சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவினரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு, விசாரணை துவக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், சிறுவனைத் தேடும் பணியை ஆரம்பித்தனர். சயீதுடன், அவரது மாமனார் வீட்டில் பணியாற்றியவர்கள் என, சிலரை சி.பி.ஐ., அடையாளம் கண்டது. அப்போது, சயீதின் மாமனாரிடம் பணியாற்றிய வேலைக்காரி சிக்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த அவர், சயீதின் மனைவியும் குழந்தையும் தமிழகத்தில் இருந்தபோது, அவர் இங்கிருந்துள்ளதும் தெரிந்தது. கடந்த 1995ம் ஆண்டில், சயீதின் மனைவி தன் தந்தையுடன் நாட்டிற்குச் செல்லும் போது, வேலைக்காரியிடம் தன் குழந்தையை கொடுத்துச் சென்றார். வேலைக்காரியோ சயீதுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் தங்கையிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளது தெரியவந்தது.கும்பகோணத்தைச் சேர்ந்த அவர்கள், இதுவரை அந்தக் குழந்தையை தங்கள் குழந்தையாக வளர்த்தனர்.
தற்போது, கும்பகோணத்தில் ஒரு பள்ளியில், பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவனை, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தித்து, அழைத்து வந்து சுப்ரீம்கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, சிறுவனுக்கும், சயீதுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், சயீதின் மகன் தான் அந்த சிறுவன் என்பது தெரியவந்தது. தற்போது, சிறுவனை சயீதிடம் ஒப்படைக்கும் முயற்சியில், சி.பி.ஐ., இறங்கியுள்ளது.தமிழக போலீசார் கைவிட்ட நிலையில், சென்னை சி.பி.ஐ.,யின் இந்த அரிய முயற்சி, 16 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தந்தையையும், மகனையும் சேர்த்து வைத்துள்ளது.