ADDED : ஆக 14, 2011 02:35 AM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த சேத்துமடை சாந்த மாகாளியம்மன் கோவில் உண்டியல் பணம்
கொள்ளையடிக்கப்பட்டது.ஆனைமலை அடுத்த சேத்துமடையில், சாந்த மாகாளியம்மன்
கோவில் உள்ளது.
நேற்று முன்தினம், ஆடி வெள்ளி வழிபாடு முடிந்து நடை
சாத்தப்பட்டது. நேற்று காலை பூஜை செய்ய, பூஜாரி சக்திவேல் வந்த போது,
கோவில் நுழைவு வாயில் சேதப்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்குள் சென்று
பார்த்த போது, மூலஸ்தான கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல்
பெயர்த்து எடுக்கப்பட்டது தெரிந்தது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு
சென்று பார்வையிட்டு மேற்கொண்ட விசாரணையில், கோவிலின் பின்பக்கம் உள்ள
தென்னந்தோப்பில், உண்டியல் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவில்
கதவுகள், உண்டியலில் பதிவான கைரேகையை போலீசார் பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.