/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/குற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகுற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைப்பு நடவடிக்கை
குற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைப்பு நடவடிக்கை
குற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைப்பு நடவடிக்கை
குற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைப்பு நடவடிக்கை
தென்காசி : குற்றவாளிகளை கைது செய்ய ஒருங்கிணைந்து செயல்பட தமிழக-கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபடுவோரில் பலர் புளியரை வழியே தமிழகத்திற்கு வந்து விடுகின்றனர். அதேபோன்று தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டோர் பலர் கேரளாவிற்கு சென்று தலைமறைவாகி விடுகின்றனர்.
இவர்களை கண்டுபிடித்து கைது செய்வதில் இரு மாநில போலீசாரும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் நெல்லை மாவட்டம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தல், கார் கடத்தலும் நடக்கிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதரி, கொல்லம் மாவட்ட எஸ்.பி.பிரகாஷ் தலைமையில் இரு மாநில போலீசாரின் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்குவது, குற்ற செயல்களை தடுப்பதில் இணைந்து செயல்படுவது, இதற்காக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் துவக்கம்தான். தேவைப்பட்டால் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் வருங்காலங்களில் நடத்தப்பட்டு குற்ற செயல்கள் தடுக்கப்படும் என நெல்லை, கொல்லம் மாவட்ட எஸ்.பி., கள் கூறினர். கூட்டத்தில் கேரள மாநில சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,ஜாம் கிறிஸ்டேனியேல், தென்காசி டி.எஸ்.பி. பா ண்டியராஜன், கேரள மாநி ல டி.எஸ்.பி.கள் ஆண்டோ, ஜார்ஜ்குட்டி, ராஜேந்திரன், ஜனார்த்தனன் மற்றும் நெல்லை, கொல்லம் மாவட்ட இன் ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.