/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீசார் குழந்தைகளுக்கு இலவச பயிற்சிபோலீசார் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
போலீசார் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
போலீசார் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
போலீசார் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
ADDED : செப் 18, 2011 09:45 PM
கோவை : மாநகர போலீசாரின் குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர் இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது.
கோவை மாநகரில் பணியாற்றும் போலீசார் மற்றும்
அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, சமீபத்தில் ஆங்கிலப்
பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி
தரப்படுகிறது. இதற்காக, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி
மையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நேற்று திறந்து வைத்தார்.
மொத்தம் 10 கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்ட இந்த மையம், துணை கமிஷனர்
விவேகானந்தன், ஆயுதப்படை உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில்
செயல்படும். மையத்தில் காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
பெண்களுக்கும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை குழந்தைகளுக்கும்
பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையில் அனுபவம் வாய்ந்த 7
பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் பேசிக், எம்.எஸ்., ஆபீஸ்
பேக்கேஜ், இன்டர்நெட், இ-மெயில் பயிற்சி அளிக்கப்படுகிறது.