ADDED : ஜூலை 23, 2011 11:43 PM
கடலூர் : கடலூர் நகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் செய்வது தடை செய்யப்படுகிறது.
கடலூர், திருவந்திபுரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் நீருந்து பைப்பில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இன்று 24 மற்றும் நாளை 25ம் தேதி நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வது தடை செய்யப்படுகிறது. இத்தகவலை நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.