Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் "விறுவிறு'

ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் "விறுவிறு'

ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் "விறுவிறு'

ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் "விறுவிறு'

ADDED : செப் 20, 2011 11:43 PM


Google News
பொள்ளாச்சி : போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்தில், இதுவரை திண்டுக்கல் - பழநி வரையில் மட்டுமே பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மற்ற பகுதிகளில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், பொள்ளாச்சி - பாலக்காடு வரையிலான அகல ரயில்பாதை பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பணிகளில் வேகம் காட்டப்பட்டு வருகிறது. அகல ரயில்பாதை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்திலுள்ள பழைய ரயில்வே ஸ்டேஷன்களை இடித்து விட்டு, புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் நடக்கிறது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்த பழைய கட்டடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டுள்ளது. தற்போது, புதிய கட்டட கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்த வழித்தடத்தில், மொத்தம் ஏழு ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அகல ரயில்பாதை திட்டத்தில், பொள்ளாச்சி பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு போன்று புதிய ஸ்டேஷன் கட்டப்பட்டு வருகிறது. பழைய ரயில்வே ஸ்டேஷனை விட புதிய ரயில்வே ஸ்டேஷன் ஐந்து அடி உயர்த்தி, நான்கு 'பிளாட் பார்ம்' அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள ரயில்வே ஸ்டேஷனில், விருந்தினர் அறை, டிக்கெட் முன்பதிவு அறை, கூட்டுறவு சங்க அறை ஆகிய மட்டும் இடிக்கப்படாமல் உள்ளது. மீதமுள்ள அனைத்து கட்டடங்களும் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றும் பணி சூடுப்பிடித்துள்ளது. அடுத்தகட்டமாக, பாதைகளில் தண்டவாளங்கள் அமைத்து இணைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில், கட்டப்படும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்களும் தலா 40 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us