/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டும் செப்., 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டும் செப்., 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டும் செப்., 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டும் செப்., 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டும் செப்., 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை : பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மட்டுமே வரும் செப்.,1ம் தேதி முதல்
பாஸ்போர்ட் பெறுவதற்கான சாதாரண மற்றும் 'தட்கல்'க்கான விண்ணப்பங்கள்
சமர்ப்பிக்க முடியும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் வெளியிட்ட அறிக்கை : கோவை
அவினாசி ரோட்டிலுள்ள சிவில் ஏரோடிரோம் ஏஜிடி பிசினஸ் பார்க்கில் சில
நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் திறக்கப்பட்டது.
எனவே,
வரும் செப்.,1ம் தேதி முதல் கோவையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கனவே கோவை பாஸ்போர்ட்
அலுவலகத்தில் சமர்ப் பித்த விண்ணப்பங்களின் பேரில் செப்.,1ம் தேதியும்
அதற்கு பின்னுள்ள தேதியில் நேர்காணல் பெற்றவர்கள், முன்னதாகவே வரும் 29
அல்லது 30 தேதிகளில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரலாம். பாஸ்போர்ட் சேவா
கேந்திராவில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு செப்.,5ம் தேதி முதல்
நேர்காணல் தேதி ஒதுக்கப்படும். தட்கல் மூலம் பாஸ்போர்ட் பெறும்
விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு ஒரு நாள் முன் விண்ணப்பிக்க வேண்டும்.
சாதாரண பாஸ்போர்ட் பெறுபவர்களுக்கு 15 நாட்கள் கழித்து நேர்காணல் நடக்கும்.
கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், ஊட்டி ஆகிய மாவட்ட பாஸ்போர்ட்
மையங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முறை மறு அறிவிப்பு வரும் வரை
தொடரும். குறிப்பிட்ட பாஸ்போர்ட் மையங் களில் புதிய விண்ணப்பங்கள்
குறிப்பாக முதன் முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே
சமர்ப்பிக்க முடியும். பழைய முறையிலான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மாவட்ட
பாஸ்போர்ட் மையங்களில் பெற முடியாது. விண்ணப்பதாரர்கள் புதிய முறை
பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெற விரும்புவோர் அறிய இணைய தள முகவரி:
டttணீ:/http://www.passportindia.gov.in
விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, சசிக்குமார் தெரிவித்ததுள்ளார்.