/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழில்வளம் மிக்க நகராட்சியாக மாற்றுவேன் பா.ம.க., வேட்பாளர் பாண்டிகாமாட்சி உறுதிதொழில்வளம் மிக்க நகராட்சியாக மாற்றுவேன் பா.ம.க., வேட்பாளர் பாண்டிகாமாட்சி உறுதி
தொழில்வளம் மிக்க நகராட்சியாக மாற்றுவேன் பா.ம.க., வேட்பாளர் பாண்டிகாமாட்சி உறுதி
தொழில்வளம் மிக்க நகராட்சியாக மாற்றுவேன் பா.ம.க., வேட்பாளர் பாண்டிகாமாட்சி உறுதி
தொழில்வளம் மிக்க நகராட்சியாக மாற்றுவேன் பா.ம.க., வேட்பாளர் பாண்டிகாமாட்சி உறுதி
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியை தொழில்வளம்மிக்க நகராட்சியாகமாற்றுவேன் என நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அ.பாண்டிகாமாட்சி தெரிவித்தார்.
குப்பை இல்லாத நகரமாகவும், கொசுக்கள் இல்லாத நகரமாகவும் மாதம் ஒரு முறை சுகாதார முகாம் அமைத்து முழு உடல் பரிசோதனை முகாம் இலவசமாக நடத்தப்படும். மாம்பழம் பதப்படுத்தும் மாம்பழக்கூழ் தொழிற்சாலை, குளிருட்டபட்ட கிட்டங்கி நகராட்சி மூலம் அமைக்கப்படும். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து தரப்படும். மனிதநேய அறக்கட்டளை குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் மற்றும் அரசு போட்டி தேர்வு, சிறப்பு பயிற்சி இலவசமாக நடத்தப்படும். விரிவாக்கப்பட்ட பாதாளசாக்கடை வசதி, ஆடுபாலம் அருகில் தரைப்பாலம் அமைக்கப்படும். 24 மணி நேரமும் மக்களுக்காக உழைப்பேன். இவ்வாறு பாண்டிகாமாட்சி கூறினார்.


