ADDED : செப் 19, 2011 12:01 AM
குற்றாலம் : குற்றாலம் அருகேயுள்ள மத்தளம்பாறையில் வேன்-பைக் மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.
குற்றாலம் அருகேயுள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் பால்ராஜ் நாடார் மகன் சவுந்தர்ராஜன் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் மத்தளம்பாறையிலிருந்து புளிச்சிகுளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புளிச்சிகுளம் விலக்கு அருகே பின்னால் வந்து கொண்டிருந்த வேன் பைக் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஆபிரகாம் சோட் ((34) கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த ஜெயபால் துரைசாமி மகன் ராஜ்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.