ADDED : செப் 14, 2011 06:18 AM
சென்னை : அரக்கோணம் ரயில் விபத்து காரணமாக முக்கிய ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படவேண்டிய ஆமதபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.30க்கும், மங்களூரு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயில் 5.30க்கும், திருவனந்தபுரம் செல்லும் ரயில் மாலை 6.05க்கும் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.