Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மயானம் அமைப்பதை எதிர்த்த மனு :கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மயானம் அமைப்பதை எதிர்த்த மனு :கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மயானம் அமைப்பதை எதிர்த்த மனு :கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மயானம் அமைப்பதை எதிர்த்த மனு :கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ADDED : ஆக 03, 2011 01:33 AM


Google News
Latest Tamil News

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குத்தம்பூண்டியில், விவசாய பணிகள் நடக்கும் பாறை அருகே, மயானம் அமைப்பதை எதிர்த்த மனு குறித்து பதிலளிக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது.

திருப்பூர் மாவட்டம் மீனாட்சிவிலக்கை சேர்ந்த செல்லப்பகவுண்டர் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஒட்டன்சத்திரம் குத்தம்பூண்டியில் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர்.

அங்குள்ள மலை பாறை அருகே நெல், கடலை போன்ற பயிர்களை விவசாயிகள் காய வைக்கின்றனர். பாறை அருகே மயானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விவசாய பணிகளை மேற்கொள்ள இயலாது. மயானம் அமைக்க கூடாது என கலெக்டர், ஆர்.டி.ஒ., ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. மயானம் அமைக்க கூடாது என உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், மனு குறித்து பதிலளிக்க கலெக்டர், ஆர்.டி.ஒ., தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us