/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/செம்பொன் குடியிருப்பு கோயிலில் திருவிளக்கு பூஜைசெம்பொன் குடியிருப்பு கோயிலில் திருவிளக்கு பூஜை
செம்பொன் குடியிருப்பு கோயிலில் திருவிளக்கு பூஜை
செம்பொன் குடியிருப்பு கோயிலில் திருவிளக்கு பூஜை
செம்பொன் குடியிருப்பு கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED : செப் 11, 2011 01:01 AM
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே செம்பொன் குடியிருப்பு கோயிலில் 504 திருவிளக்கு பூஜை நடந்தது.
பேய்க்குளம் அருகே செம்பொன் குடியிருப்பு பெருமாள்சாமி, முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி மற்றும் ஊர்மக்கள் சார்பில் 504 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜைக்கு கோயில் தர்மகர்த்தா ஸ்ரீராம் ராமர் தலைமை வகித்தார். முருகன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிளக்கு பூஜையில் முதல் திருவிளக்கை நாராயணவடிவு அம்மாள் ஏற்றினார். திருவிளக்கு பூஜையில் சொற்பொழிவு மற்றும் பாடல்களை ஸ்ரீ சுவாமினி ஸ்ரீ குகப்பிரியானந்தா, சரஸ்வதி சுவாமி பாடி நடத்தினார். திருவிளக்கு பூஜையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன், பொதுச் செயலாளர் சக்திவேலன், மாவட்ட இந்து அன்னையர் முன்னணி செயலாளர் சரோஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்கந்தசாமி, முருகானந்தகனி, சுயம்புகனி, செல்வராணி, பட்டுசெல்வி, மாவட்ட இந்து முன்னணி (அன்னையர்) தலைவி பட்டுக்கனி, சாத்தை ஒன்றிய அன்னையர் முன்னணி செயலாளர் தசரதபூபதி, உடன்குடி ஒன்றிய செயலாளர் கேசவன், ஆழ்வை ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் காளியப்பன், தலைவர் முருகப்பெருமாள், சுந்தர்ராஜ், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகேஸ்வரி நன்றி கூறினார்.