/உள்ளூர் செய்திகள்/மதுரை/கோயில் திருவிழாவில் தகராறு 60 பேர் மீது வழக்கு: 23 பேர் கைதுகோயில் திருவிழாவில் தகராறு 60 பேர் மீது வழக்கு: 23 பேர் கைது
கோயில் திருவிழாவில் தகராறு 60 பேர் மீது வழக்கு: 23 பேர் கைது
கோயில் திருவிழாவில் தகராறு 60 பேர் மீது வழக்கு: 23 பேர் கைது
கோயில் திருவிழாவில் தகராறு 60 பேர் மீது வழக்கு: 23 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2011 01:51 AM
மேலூர் : கோயில் திருவிழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியில் ஏற்பட்ட மோதலில் போலீசார் 60 பேர் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து, 23 பேரை கைது செய்தனர்.
மதுரை மேலூரில் உள்ளது தெற்குதெரு கிராமம். இங்கு ஒரு பிரிவினருக்கு சொந்தமான அரளிப் பாறை ஆண்டி கோயிலில் நேற்று திருவிழா நடந்தது. இரவு நடந்த கச்சேரியில் ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. அதை பிடிக்காத மற்றொரு பிரிவைச் சேர்ந்த வேலு என்பவர் கூட்டத்திற்குள் கல்லை எறிந்துள்ளார். இதை சுரேஷ் என்பவர் கண்டிக்க இரு தரப்பு மோதலாக மாறியது.
இதில் படுகாயமடைந்த சுரேஷ் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், அன்புமணி மேலூர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மாடசாமி இருதரப்பிலும் தலா 30 பேர் என 60 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பூமிநாதன், சின்னையா, அழகேசன், ரகுபதி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை முயற்சி வழக்கின் கீழ் முருகன், அன்புமணி, பூமிநாதன், சிலம்பரசன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.