யூனியன் சேர்மன் வீட்டுக்கு புதிய சாலை
யூனியன் சேர்மன் வீட்டுக்கு புதிய சாலை
யூனியன் சேர்மன் வீட்டுக்கு புதிய சாலை
ADDED : செப் 03, 2011 12:46 AM
கோபிசெட்டிபாளையம்: புஞ்சை துறையம்பாளையத்தில் பழுதடைந்த சாலைகள் பல இருக்க, யூனியன் சேர்மன் குடியிருக்கும் அண்ணாநகர் சாலை மட்டும் அவசர கதியில் சீரமைக்கப்படுகிறது.
டி.என்.பாளையம் பஞ்சாயத்து யூனியன் புஞ்சைதுறையம்பாளையத்தில், ஃபாரஸ்ட் செல்லும் சாலை, உப்புபள்ளம் மயானத்துக்கு செல்லும் சாலை ஆகியவை யூனியனுக்குட்பட்டது. சாலைகள் குண்டும் குழியமாக பழுதடைந்து கிடக்கின்றன. பொது மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் சாலையில் இரு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது.
யூனியன் பொது நிதி மூலமாக இந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடியும் தருவாயில், இந்த சாலைகளுக்கு விமோச்சனம் ஏற்படவில்லை.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: புஞ்சை துறையம்பாளையம் பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் சாலைகளை, யூனியன் நிர்வாகம் இதுவரை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க.,வை சேர்ந்த யூனியன் சேர்மன் குடியிந்து வரும் அண்ணாநகர் சாலை மட்டும் அவசர கதியில் சீரமைத்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இந்த சாலை போடப்பட்டது. மற்ற சாலைகளை சீரமைக்காமல்; இந்த சாலையை மட்டும் சீரமைப்பது ஏன்? இவ்வாறு அவர்கள் கூறினர்.