/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவியர் மறியல்அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவியர் மறியல்
அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவியர் மறியல்
அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவியர் மறியல்
அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவியர் மறியல்
ADDED : செப் 07, 2011 11:51 PM
சென்னை : போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பாரதி கல்லூரி மாணவியர், நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், வடசென்னை பகுதியில், ஒரு மணி நேரத்திற்கும் மேல், போக்குவரத்து முடங்கியது.சென்னை, பிராட்வே சாலையில், பாரதி அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என, மாணவியர் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.ஆனால், கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மாணவியர், நேற்று காலை திடீரென, கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயர் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து, அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போவோம் என, கோரிக்கை விடுத்தனர்.பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் குமார் மற்றும் அதிகாரிகள் மாணவியரிடம் பேசும் போது, 'உங்கள் பிரச்னையை நிர்வாகத்திடம், உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்கிறோம். ஒரு வாரத்திற்குள், எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்கும்' என, சமாதானப்படுத்தினர். இதையேற்று, மாணவியர் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.மாணவியர் போராட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால், பிராட்வே சாலை, பழைய சிறைச்சாலை சாலை, ராயபுரம் மேம்பாலம், பேசின் பாலம் உள்ளிட்ட, வடசென்னையின் முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.