/உள்ளூர் செய்திகள்/சேலம்/வலு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு பாராட்டு விழாவலு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா
வலு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா
வலு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா
வலு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா
ADDED : ஆக 01, 2011 04:07 AM
சேலம்: மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்
பட்டத்தை வென்ற சேலம் அணிக்கு, நேற்று பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.சென்னையில், மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
சீனியர் வலு தூக்கும் போட்டி நடந்தது. போட்டியில், தமிழகத்தில், 16
மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் 180 பேர், வீராங்கனைகள் 70 பேர் என மொத்தம்,
250 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 2 நாட்கள் நடந்த போட்டியில், சேலம்
மாவட்ட அணி சார்பில் மகளிர் பிரிவில் கலந்து கொண்ட வீராங்கனைகள்
முருகேஸ்வரி, பவித்ரா ஆகியோர் முதலிடமும், ராஜேஸ்வரி, பிரியா, அன்பரசி
ஆகியோர் 2ம் இடமும், பிரியா, கஜீதாபேகம், மோகனா, யுகஸ்ரீ ஆகிய மூவரும்
மூன்றாம் இடமும் பெற்றனர்.இவர்கள், அனைவரும் அதிகபட்சமாக, 102 புள்ளிகள்
எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். தொடர்ந்து,
நான்காவது ஆண்டாக சேலம் வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.ஆண்கள்
பிரிவில் சண்முகம், ரஞ்சித்குமார், சக்தி ஆகியோர் முதலிடமும், பாலாஜி 2வது
இடமும், அஸ்வீன் மூன்றாம் இடமும், ஞானசுந்தரம், விக்னேஷ், கோபி ஆகியோர்
4ம் இடமும் பிடித்துள்ளனர். இவர்கள், அனைவரும் அதிகபட்சமாக, 88 புள்ளிகள்
எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இவர்கள், 2வது ஆண்டாக
சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.மாநில அளவில் தங்கப்பதக்கம் வெற்ற வீரர்,
வீராங்கனைக்கு சேலம் மாவட்ட வலு தூக்கும் சங்கத்தின் சார்பில், நேற்று
பாராட்டு விழா நடத்தப்பட்டது. சங்க செயலாளர் பொன்சடையன் வரவேற்றார்.
தெய்வப்பிள்ளை முன்னிலை வகித்தார். செயல் தலைவர் ஜெயபால் தலைமை வகித்து
வீரர், வீராங்கனைக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.தேசிய அளவில்,
சட்டீஸ்கர் மாநிலம், பிலாய் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ம் தேதி
நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வீரர்கள் சண்முகம், ரஞ்சித், கோபி,
வீராங்கனைகள் ராஜேஸ்வரி, பவித்ரா, முருகேஸ்வரி ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. வக்கீல் விவேகானந்தன்,
தனசேகர் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.