போக்குவரத்து கழகத்திற்கு ஐகோர்ட் கிளை கண்டனம்
போக்குவரத்து கழகத்திற்கு ஐகோர்ட் கிளை கண்டனம்
போக்குவரத்து கழகத்திற்கு ஐகோர்ட் கிளை கண்டனம்
ADDED : செப் 06, 2011 10:38 PM
மதுரை: விருப்ப ஓய்வில் சென்ற கண்டக்டரிடம் பணிக்கொடையை பிடித்தம் செய்த அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் உத்தரவு வக்கிரமானது என மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்தது.
திருவையாறை சேர்ந்த ஜோதி தாக்கல் செய்த ரிட் மனு: அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக 22 ஆண்டுகள் பணிபுரிந்து, 2003ல் விருப்ப ஓய்வு பெற்றேன். இந்நிலையில் சம்பள உயர்வு நிறுத்த தண்டனை பெற்ற காலத்தில் கூடுதல் சம்பளம் வழங்கியதாக கூறி, பணிக்கொடையில் ரூ.49, 450 ஐ பிடித்தம் செய்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து, திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருணாச்சலம் ஆஜரானார். நீதிபதி வினோத் குமார் சர்மா பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார். அவருக்கு சம்பளம் கிடையாது. ஓய்வு பெற்ற பின், மனுதாரருக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்நிலையில் அவரது பணிக்கொடையில் பிடித்தம் செய்தது தவறு. இத்தகைய உத்தரவை மனநலம் சரியில்லாதவரால் பிறப்பிக்க முடியும். பிடித்தம் செய்த பணிக்கொடையை இரு மாதங்களுக்குள் அரசு போக்குவரத்து கழகம், மனுதாரருக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.