தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக எம்.பி., ஆதரவாளர் மனு
தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக எம்.பி., ஆதரவாளர் மனு
தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக எம்.பி., ஆதரவாளர் மனு
ADDED : செப் 23, 2011 11:52 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க., மேயர் வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சி எம்.பி., யின் ஆதரவாளர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
இம்மாநகராட்சி தி.மு.க., மேயர் வேட்பாளர் பொன் இனிதா, அடுத்தவாரம் மனுதாக்கல் செய்யவுள்ளார். இங்கு தி.மு.க., கவுன்சிலராக இருந்த ரகுநாதன், தி.மு.க.,வைச் சேர்ந்த தூத்துக்குடி ஜெயதுரை எம்.பி.,யின் தீவிர ஆதரவாளர்.இவரது மனைவி ஹேமா, மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட, நேற்று மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் மனுதாக்கல் செய்தார். மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமி பரிந்துரையின் பேரில், தலைமையால் அறிவிக்கப்பட்ட கட்சி அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளருக்கு எதிராக, ஜெயதுரை எம்.பி.,யின் ஆதரவாளர் மனுதாக்கல் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.