காரில் கடத்திய ரூ.6.30 லட்சம் சந்தனக் கட்டை பறிமுதல் :உடுமலையில் 2 பேர் கைது
காரில் கடத்திய ரூ.6.30 லட்சம் சந்தனக் கட்டை பறிமுதல் :உடுமலையில் 2 பேர் கைது
காரில் கடத்திய ரூ.6.30 லட்சம் சந்தனக் கட்டை பறிமுதல் :உடுமலையில் 2 பேர் கைது
ADDED : ஜூலை 25, 2011 12:20 AM
உடுமலை : உடுமலை அருகே, 6.30 லட்ச ரூபாய் மதிப்பிலான சந்தனக் கட்டைகளை, கொழிஞ்சம் பாறைக்கு காரில் கடத்திச் சென்ற இரண்டு பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட, குழிப்பட்டியில் இருந்து வல்லக்குண்டாபுரம் சுற்றுப்பகுதி வழியாக சந்தனக் கட்டைகளை கடத்துவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரக அலுவலர் தங்கராஜ் பன்னீர் செல்வம் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வளையபாளையம் பால் பண்ணை அருகே கண்காணிப்புப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். இரவு 8.00 மணிக்கு வனப்பகுதியையொட்டி வந்த டி.என்., 38 இ 7182 என்ற ஓபல் அஸ்ட்ரா காரினை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில், சந்தனக் கட்டைகள் மூட்டை, மூட்டையாகக் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, கொழிஞ்சம்பாறை நல்லாம்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ்,32, மீனாட்சிபுரம் மெல்லிமேட்டைச் சேர்ந்த சிஜின்,27, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 13 மூட்டைகளில் இருந்த 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 210 கிலோ சந்தனக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ், கடந்த மாதம் 26ம் தேதி சந்தனக் கட்டை கடத்தலுக்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது, என்றனர்.