Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஸ்டேஷன் பராமரிப்புக்கு கூடுதல் ஊழியர்கள் தேவை :எஸ்.ஆர்.எம்.யூ., மாநாட்டில் வலியுறுத்தல்

ஸ்டேஷன் பராமரிப்புக்கு கூடுதல் ஊழியர்கள் தேவை :எஸ்.ஆர்.எம்.யூ., மாநாட்டில் வலியுறுத்தல்

ஸ்டேஷன் பராமரிப்புக்கு கூடுதல் ஊழியர்கள் தேவை :எஸ்.ஆர்.எம்.யூ., மாநாட்டில் வலியுறுத்தல்

ஸ்டேஷன் பராமரிப்புக்கு கூடுதல் ஊழியர்கள் தேவை :எஸ்.ஆர்.எம்.யூ., மாநாட்டில் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 19, 2011 09:31 PM


Google News

கோவை : 'அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பராமரிப்புப் பணிகளை மேம்படுத்த, கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, எஸ்.ஆர்.எம்.யூ., வலியுறுத்தியுள்ளது.

சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் சேலம் கோட்ட எலக்ட்ரிக் கவுன்சில் மாநாடு, கோவையில் கடந்த இரு நாட்களாக நடந்தது. மாநாட்டுக்கு எலக்ட்ரிக் கவுன்சிலின் சேலம் கோட்டத் தலைவர் மன்னன் தலைமை வகித்தார். மாநாட்டில், அமைப்பின் தலைவர் ராஜா ஸ்ரீதர் பேசுகையில், எஸ்.ஆர்.எம்.யூ., போராடிப் பெற்ற பல கோரிக்கைகளைப் பற்றி விளக்கினார். சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் கேசவன், சேலம் கோட்டத் தலைவர் பாண்டியன், கோட்டச் செயலாளர் கோவிந்தன் உட்பட பலரும் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: சேலம் கோட்டத்திலுள்ள அனைத்து யு.டி.எஸ்., மற்றும் பி.ஆர்.எஸ்., அலுவலகங்களை ரயில்வே போர்டு உத்தரவின்படி, நவீனமயமாக்க வேண்டும். இந்த அலுவலகங்களிலும், பார்சல் அலுவலகங்களிலும் தரமான மேஜை, நாற்காலிகளை வழங்க வேண்டும். கோவை புக்கிங் அலுவலகத்தில், 'ஏர் கூலர்' பொருத்த வேண்டும். கோவை ரயில்வே ஸ்டேஷன் உட்பட அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பராமரிப்புப் பணிக்கு கடுமையான ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களையும், ரயில்களையும் சுத்தமாகப் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதல் ஊழியர்களை நியமித்து ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களை சிறப்பாகப் பராமரிக்க வேண்டும். குட்ஷெட்களில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது; அவற்றிலும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். டி.யு.பி.- சி.பி.எப்., பகுதிகளில் புதிய பி.ஆர்.எஸ்., - யு.டி.எஸ்., அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும்; சி.பி.எப். ஸ்டேஷன் முழுவதற்கும் ஜெனரேட்டர் நிறுவி, எலக்டரிக்கல் பிரிவு தொழிலாளர் மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.சி.சி.எல். மற்றும் ராணுவம் போன்ற பணிகளுக்குச் செல்லும் ஊழியர்களுக்கு அதிகப்படியான பதவிகளை உருவாக்க வேண்டும். சேலம் நகரில் தனியாக சி.ஆர்.எஸ்., நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.எஸ்.ஆர்.எம்.யு., கோவை தலைமைக் கிளைத் தலைவர் ஜான் செபாஸ்டியன் வரவேற்றார்; கிளை நிர்வாகி வடிவேலு நன்றி கூறினார்.dinamalar coimbatore distrisct news







      Our Apps Available On




      Dinamalar

      Follow us