"தப்பிக்க' வசதியாக உள்ளது திருச்சி சிறை?
"தப்பிக்க' வசதியாக உள்ளது திருச்சி சிறை?
"தப்பிக்க' வசதியாக உள்ளது திருச்சி சிறை?
ADDED : செப் 01, 2011 12:14 AM
திருச்சி : மதுரை திருநகர் பகுதியில் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பிருந்தா, 32, என்ற பெண் திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜூலை 4ம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது, பாதுகாப்புக்கு இருந்த போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி, தப்பியோடினார். அவர் தப்பிக்க, சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணமாக இருக்கலாம் என, போலீசார் அப்போது சந்தேகப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆல்நாத் நெஞ்சுவலிக்காக அரசு மருத்துவமனையில் அவசர, அவசரமாக சேர்க்கப்பட்டு தப்பியுள்ளார். ஆகையால், இம்முறை ஆல்நாத் தப்பிச் செல்லவும் சிறைத்துறை அதிகாரிகள் யாராவது உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. போலீசார் தங்களின் சந்தேகத்தை விரைவில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்களின் ஆலோசனைப்படி விசாரணை துவங்க முடிவு செய்துள்ளனர்.
தப்ப உதவும் மொபைல் பேச்சு: மோசடிப் பெண் பிருந்தா தப்பியபோது, பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் மொபைல் போனை வாங்கி, தாராளமாக பயன்படுத்தியுள்ளார். அந்த மொபைல் பேச்சு மூலமாகத் தான் அவர் தப்பிச் சென்றுள்ளார். அதேபோல் தான், சிறைத்துறை அதிகாரிகளின் உதவியோடு மொபைல்போன் பேச்சு மூலமே அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் ஆல்நாத், தப்பியிருக்க முடியும் என்று தெரிகிறது. ஏனென்றால், அவர் மருத்துவமனை வளாகத்தை விட்டு வந்தவுடனே, ஏதோ ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். ஆகையால், சிறை வளாகத்தில் தாராளமாக கிடைக்கும் மொபைல்போன் பயன்பாட்டை நிறுத்தினாலே இதுபோன்ற, 'எஸ்கேப்' நிகழ்வுகளை, போலீசார் தடுக்க முடியும்.