Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

பெண் வேட்பாளர்கள் விளம்பரங்களில் கணவர்கள் ஆதிக்கம்

ADDED : செப் 27, 2011 11:49 PM


Google News
Latest Tamil News

தர்மபுரி : உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில், பெரும்பாலான பெண் தலைவர்கள் பின்னணியில், அவர்களது கணவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் விளம்பரங்களில், பெண் வேட்பாளரின் கணவர்களின் போட்டோக்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



எல்லாத் துறையிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பொறுப்புக்குள் வந்துள்ள, பெண் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ளவர்களின் பின்னணியில், அவர்களது கணவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.பல ஊராட்சிகளில் பெண்கள், ஊராட்சி நிர்வாகத்தில் கையெழுத்து மட்டுமே போடும் நிலையுள்ளது. ஒரு சில பெண் தலைவர்கள் மட்டுமே, துணிந்து முடிவு எடுப்பதிலும், ஊராட்சியை வழி நடத்துவதிலும் சிறப்பாகப் பணிபுரிகின்றனர்.உள்ளாட்சிப் பதவிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோஷம் ஒரு பக்கம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது, தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான பெண் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களில் கூட, அவர்களது கணவரின் போட்டோவுடன் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.தேர்தல் வெற்றிக்குப் பின், பொறுப்புக்கு வரும் பெண்களின் பின்னணியில், அவர்களது கணவர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதைத் தான், இது காட்டுகிறது.



தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வரும் பெண்கள், தங்கள் கணவர்களின் தலையீடு இல்லாமல் தனித் தன்மையுடனும், சுதந்திரமாகவும் நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் வகையில், தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.வரும் உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கு மொத்தம், 40 சதவீதம், 75 பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us