
அத்துமீறிய வார்டு உறுப்பினர்!
காங்கிரஸ் கட்சியின், ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால், எம்.எல்.ஏ.,வும் மைக்கை விட்டு விலகினார். பின், அந்தப் பெண்,'உள்ளாட்சித் தேர்தல்ல வார்டு உறுப்பினர் முக்கியம், முக்கியமென பேசுறீங்க... ஆனா, நாங்க மேடையில பேச வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கறீங்க... பெண் சுதந்திரம் என்ற பேச்செல்லாம் வார்த்தையுடன் இருக்கக் கூடாது...' என, வீராவேசமாகப் பேசி முடித்தார். அனைவரும் கை தட்டினர்.அவர் அத்துமீறி மைக்கில் பேசியதற்கு, நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருந்த நிர்வாகிகள், அவருக்குக் கிடைத்த கை தட்டலைப் பார்த்து, 'கப்-சிப்' ஆகிவிட்டனர்.
'ஸ்பெக்ட்ரம் வந்துருச்சே...!'சென்னை காமராஜர் அரங்கில், கொங்கு நண்பர்கள் சங்க பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையேற்றார்.விழாவில், கொங்கு மாமணி விருது பெற்ற, தமிழக பால் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் பேசும்போது, 'கடந்த ஆட்சியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கோவை, சேலம், தர்மபுரி பகுதிகளில் பாலை நடுரோட்டில் கொட்டும் போராட்டம் நடந்தது.
தமிழக சட்டசபையில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'ரத்தத்திற்கே பயப்படாத நான், இந்த பாலைக் கண்டா பயப்படப் போகிறேன்' என்று பேசியது, இன்றும் சட்டசபை பதிவேட்டில் உள்ளது' என்றார்.இதைக் கேட்ட அங்கிருந்த சங்க உறுப்பினர் ஒருவர், 'பாலைக் கண்டு பயப்படலை... ஆனா, தேர்தல்ல தோத்து, ஸ்பெக்ட்ரம் பூதம் வந்ததும், அதைக் கண்டு பயப்பட வேண்டியது வந்துருச்சே...' என, 'கமென்ட்' அடித்ததும், அருகில் இருந்தவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது.