/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வுபா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு
பா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு
பா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு
பா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 03, 2011 12:09 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பா.ஜ., இளைஞர் அணியின் மாவட்ட கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மான்சிங் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணைத்தலைவர் ராஜேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர்களாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் ஆகியோரும், தூத்துக்குடி நகர இளைஞர் அணி தலைவராக சிவகணேஷ், பொதுச்செயலாளராக முத்துராமன், தூத்துக்குடி ஒன்றிய இளைஞர் அணி தலைவராக சுந்தர், உடன்குடி ஒன்றிய தலைவராக பத்மநாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.