/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கவிஞர் சிற்பிக்கு பவள விழா: அப்துல் கலாம் பங்கேற்புகவிஞர் சிற்பிக்கு பவள விழா: அப்துல் கலாம் பங்கேற்பு
கவிஞர் சிற்பிக்கு பவள விழா: அப்துல் கலாம் பங்கேற்பு
கவிஞர் சிற்பிக்கு பவள விழா: அப்துல் கலாம் பங்கேற்பு
கவிஞர் சிற்பிக்கு பவள விழா: அப்துல் கலாம் பங்கேற்பு
ADDED : ஜூலை 26, 2011 09:30 PM
கோவை : இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் சிற்பிக்கு, கோவையில் வரும் 30, 31ம் தேதிகளில், பவள விழா நடக்கிறது; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்க உள்ளார்.
கோவையில், 'வானம்பாடி' புதுக்கவிதை இயக்கத்தை துவக்கிய மூத்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சிற்பி. பாரதியார் பல்கலையின் தமிழ் துறை தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவர், 'ஒரு கிராமத்து நதி' என்ற கவிதை நூலுக்கும், 'அக்னி சாட்சி' என்ற மொழி பெயர்ப்பு நாவலுக்கும், சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 75 வயது நிறைவடைந்த இவருக்கு, இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களும், நண்பர்களும் இணைந்து, வரும் 30, 31ம் தேதிகளில், கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி சரோஜினி அரங்கத்தில், பவள விழா நடத்துகின்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 'சந்திராயன்' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் அறிஞர் யாசுராஜன், இ.கம்யூ., தலைவர் நல்லகண்ணு, சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் மருதாசல அடிகளார், தொழிலதிபர் மகாலிங்கம், பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வாணவராயர், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், கவிஞர் புவியரசு பங்கேற்க உள்ளனர். சிற்பியின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம், கவியரங்கம், நூல் வெளியீடுகள் மற்றும் சிற்பி அறக்கட்டளை சார்பில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.