/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடித் திருவிழாசந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடித் திருவிழா
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடித் திருவிழா
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடித் திருவிழா
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடித் திருவிழா
ADDED : ஆக 29, 2011 11:11 PM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், உறியடித் திருவிழா நடைபெற்றது.ஊத்துக்கோட்டை, தட்டாரத் தெருவில் உள்ளது, சந்தான வேணுகோபால சுவாமி கோவில்.
இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி நாள் முடிந்து வரும் அமாவாசை நாளில், உறியடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, நேற்று முன்தினம், உறியடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, அன்று காலை 6 மணிக்கு, பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் உறியடித் திருவிழா நடந்தது. மாலை உற்சவர், பாமா, ருக்மணி திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இரவு 7 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில், ஊத்துக்கோட்டையில் உள்ள வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.