ADDED : செப் 21, 2011 01:12 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயம்
அடைந்த பெண்ணுக்கு இழப்பீட்டுதொகை வழங்கப்படாத அரசு பஸ் ஜப்தி
செய்யப்பட்டது.
சிவகாசி முனியஈஸ்வரன் காலனியை சேர்ந்த வன்னியபெருமாள் மø னவி சவுந்திரம்.
சம்பவத்தன்று இவர் விளாத்திகுள ம் செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து
விளாத்திகுளம் செல்லும் அரசு பஸ்சில் சென்றுள்ளார். பஸ் குறுக்குச்சாலை
பகுதியில் சென்றபோது பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த சவுந்திரம்
படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த இவர் தூத்துக்குடி குற்றவியல்
நீதிமன்றத்தில் ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு வந்த தீர்ப்பில் ரூ.95 ஆயிரத்து 650ஐ வட்டியுடன்
சேர்த்து ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 316 ஐ இழப்பீட்டுத்தொகையாக படுகாயம்
அடைந்த சவுந்திரத்திற்கு அரசு போக்குவரத்து நிர்வாகம் வழங்க
உத்தரவிடப்பட்டது. தீர்ப்பு கூறிய பின்னரும் இழப்பீட்டுத்தொகை அரசு
போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனையடுத்து அவர் நிறைவேற்றுதல் மனுவை
தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி
இழப்பீட்டுதொகை வழங்கப்படாத அரசு பஸ்சை ஜப்திசெய்து உத்தரவிட்டார். இவரது
உத்தரவின் பேரில் கோர்ட் அமி னா நடராஜன் அரசு பஸ் சை ஜப்திசெய்து கோர்ட்டி
ல் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்
என்பது குறிப்பிடதக்கது.