/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரேஷன் கடை அமைப்பேன் : வேட்பாளர் ரவிக்குமார் உறுதிரேஷன் கடை அமைப்பேன் : வேட்பாளர் ரவிக்குமார் உறுதி
ரேஷன் கடை அமைப்பேன் : வேட்பாளர் ரவிக்குமார் உறுதி
ரேஷன் கடை அமைப்பேன் : வேட்பாளர் ரவிக்குமார் உறுதி
ரேஷன் கடை அமைப்பேன் : வேட்பாளர் ரவிக்குமார் உறுதி
ADDED : அக் 03, 2011 10:56 PM
விருதுநகர் : ''விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புது ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் ,'' என, தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுன் ஊராட்சியில் ஏற்கனவே தலைவராக இருந்த இவர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் லெட்சுமி நகரில் ஓட்டுகள் சேகரித்தபோது கூறியதாவது: ஊராட்சி அனைத்து ஊர்களுக்கும் பாகுபாடின்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன். லெட்சுமி நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 'ரேஷன்' கடையை உடனடியாக கொண்டு வருவேன். கருப்பசாமி நகர், பாப்பாகுடி மக்களுக்கு புதிய மயானம், பஸ் வசதி செய்து தருவேன். நிதி ஒதுக்கீடு இல்லாமல் விடுபட்டுபோன சின்ன மூப்பன்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 'புதிய மேல்நிலை தொட்டி' அமைப்பேன். மழைகாலங்களில் தெருக்களில் தேங்கும் தண்ணீரை வாறுகால் கட்டி வெளியேற்றுவேன். கொசு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வாரம் இரண்டு முறை மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பேன். நடுநிலைபள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக மாற்றவும், குண்டும் குழியுமான ரோடுகளை சம்பந்த்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தரமான ரோடுகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எனக்கு பூட்டுசாவி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன், என்றார்.


