/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு "தினமலர்' செய்தி எதிரொலிநரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு "தினமலர்' செய்தி எதிரொலி
நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு "தினமலர்' செய்தி எதிரொலி
நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு "தினமலர்' செய்தி எதிரொலி
நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு "தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வாழும் நரிக்குறவ இன மக்களின் குழந்தைகளுக்கு அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாடோடிகளாக வந்த நரிக்குறவ இன மக்கள் வாழ்கின்றனர்.
இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்க பள்ளியிருந்தும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், வறுமையின் காரணமாகவும், ஊசி, பாசி விற்கும் தொழிலுக்கும், பிச்சை எடுக்கவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனால், இந்த குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிறது. இது குறித்து 'தினமலரில்' நேற்று போட்டோ வெளியானது. இதையடுத்து, கோவை கிளாஸ்சின் 'சைல்டு லைன்' சார்பில் பஸ் ஸ்டாண்டிலிருந்து நரிக்குறவ இன குழந்தைகள் மீட்கப்பட்டு, வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழனிகவுண்டன்புதூரிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி கூறியதாவது: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வாழும் நரிக்குறவ இன மக்களின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் சார்பில் அங்கிருக்கும் மக்களிடம் பேசினோம். ஆனால், பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். அதன்பின், நேற்று 'சைல்டு லைனை' சேர்ந்தவர்கள் போலீஸ் உதவியுடன் பெற்றோருடன் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். மொத்தம் ஒன்பது குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், நான்கு வயதுடைய மூன்று குழந்தைகளை அங்கன்வாடி மையத்திலும், ஆறு வயதுடைய ஆறு குழந்தைகள் முதல் வகுப்பிலும் சேர்த்து கொள்ளப்பட்டனர். இதுதவிர, 11 வயதுடைய மூன்று குழந்தைகள் ஏற்கனவே பள்ளியில் படித்து நின்றுவிட்டனர். இந்த மாணவர்களை ஐந்தாம் வகுப்பில் சேர்த்து கொண்டுள்ளோம். இம்மாணவர்களுக்கும், சக மாணவர்கள் போன்று இலவச சீருடை, புத்தகம் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.