/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மணல் கொள்ளை, கழிவுநீரால் பொலிவிழந்த "வைகை' வேதனைமணல் கொள்ளை, கழிவுநீரால் பொலிவிழந்த "வைகை' வேதனை
மணல் கொள்ளை, கழிவுநீரால் பொலிவிழந்த "வைகை' வேதனை
மணல் கொள்ளை, கழிவுநீரால் பொலிவிழந்த "வைகை' வேதனை
மணல் கொள்ளை, கழிவுநீரால் பொலிவிழந்த "வைகை' வேதனை
ADDED : ஆக 21, 2011 11:53 PM
பரமக்குடி : பரமக்குடி மக்களின் குடிநீர் தேவைக்கு ஜீவாதாரமாய் விளங்கும் பெண்ணாகப் போற்றி வணங்கப்படும் வைகை ஆறு, மணல் கொள்ளை, சாக்கடைகளின் சங்கமத்தால் பொலிவிழந்து அதன் நாடி தளர்ந்து ஒட்டுமொத்த சமூகத்தின் கண்முன்னே சிதைந்து வருகிறது.
பரமக்குடியின் ஜீவநதியால் ஒருகாலத்தில் விளங்கிய வைகை ஆற்று தண்ணீர் தெளிந்த நீரோடை போலவும், கரை ஓரங்களில் பிரம்புக்காடுகளாய் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இதெல்லாம் மும்மாரி பொழிந்த நாட்களில் இருந்தது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை ஆற்றில் தண்ணீர் வருகிறது. கட்டுமான தேவைக்காக ஆற்றின் மணல் சுரண்டப்பட்டதால் வைகைஆறு கட்டாந்தரையாகி விட்டது. மேலும், கழிவுநீர் சங்கமத்தால் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. காட்டுப்பரமக்குடி தொடங்கி, ஆற்றுப்பாலம், முத்தாலம்மன், பெருமாள் கோயில் படித்துரைகள், தரைப்பாலம், காக்காத்தோப்பு முடிய ஆற்றில் எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளையால் பெரிய பள்ளங்கள் உருவாகி 'சந்திர மண்டலம்' போல காட்சியளிக்கிறது. வைகை அணையில் குறைந்தளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், இங்குள்ள அபாயகரமான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உயிரிழப்புகள் சர்வசாதாரணமானாகி விட்டது. இதுவரை நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். பள்ளங்களில் தேங்கும் மணலையும் மாட்டு வண்டிகளில் வந்து சுரண்டி எடுத்து செசல்கின்றனர். ஒரு மாட்டு வண்டிக்கு குறைந்தபட்சமாக 150 ரூபாய்க்கு விற்றாலும், இங்கு ஓடும் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளால் ஒரு நடைக்கு 7 ஆயிரத்து 500ரூபாய் ஆகிறது. தொடர்ந்து தினமும் ஐந்து முறை மணல் அள்ளுகின்றனர். ஆண்டிற்கு ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பிற்கு மணல் பட்டப்பகலில் திருடப்படுகிறது. தனிநபர் வருமானத்திற்காக நகரின் ஒட்டு மொத்த நீர் வளம் பாழக்கப்படுவது வேதனைக்குரியது. மேலும் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36வார்டுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் வைகையில் தான் சங்கமிக்கிறது. ஆற்றின் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சாதாரண கிணறுகளின் ஊற்று நீர் கெட்டுப்போய் தொற்று அபாயம் நிலவுகிறது. 'நாடி தளரும் வைகை அன்னை'யை காக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


