/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/காயல்பட்டணத்தில் மயான வழி பலகை உடைப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்காயல்பட்டணத்தில் மயான வழி பலகை உடைப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
காயல்பட்டணத்தில் மயான வழி பலகை உடைப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
காயல்பட்டணத்தில் மயான வழி பலகை உடைப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
காயல்பட்டணத்தில் மயான வழி பலகை உடைப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
ADDED : செப் 22, 2011 12:08 AM
காயல்பட்டிணம் : காயல்பட்டணஉச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவில் மயானம் செல்லும் ரோட்டில் மர்ம நபர்கள் மயானம் செல்லும் வழி பலகையை உடைத்ததால் அந்த பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
காயல்பட்டண உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவில் சுமார் 400 வீடுகளுக்கும் மயானம் செல்லும் பாதையில் மயானம் செல்லும் வழி பலகையை மர்ம நபர்கள் உடைத்ததால் அந்த பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை அறிந்த தாசில்தார் நேரில் வந்து அந்த பலகை பார்த்து அந்த பகுதி கவுன்சிலர் கணேசன் பால்ராஜிடம் மயானம் சாலைபாதை ரிக்கார்டு சரியாக இருந்தால் அந்த பலகையை நான் அமைத்து தருகிறேன் என்று உறுதி அளித்து சென்றார். அந்த பகுதியின் பலகை உடைத்த நபரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமாதான கூட்டத்தில் தாசில்தார் வீராச்சாமி, வருவாய் அதிகாரி சுரேஷ், விஏஓ., செல்வலிங்கம், கவுன்சிலர் கணேசன்பால்ராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.