/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆயுதங்களை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவுஆயுதங்களை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
ஆயுதங்களை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
ஆயுதங்களை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
ஆயுதங்களை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 25, 2011 01:19 AM
கோவை :'உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு, ஆயுதம் வைத்திருப்போர் ஒப்படைக்க வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து கலெக்டரின் அறிக்கை:மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்., 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது.
வரும் 29ம் தேதி தேர்தல் பணிகள் முடிவடைகின்றன. தேர்தலை சுமூகமாக நடத்த, தேர்தல் சமயத்தில் சட்ட ஒழுங்கினை பராமரிக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உரிமம் பெற்ற ஆயுதங்கள் வைத்திருக்கும் உரிமதாரர்கள் அனைவரும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது ஆயுதக் கிடங்குகளில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். உத்தரவில் விதிமீறல் அல்லது தேர்தல் காலத்தில் ஒப்படைக்காமல் இருந்தால், உரிமதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.