Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முகையூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

முகையூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

முகையூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

முகையூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

ADDED : ஆக 17, 2011 03:47 AM


Google News

திருக்கோவிலூர் : முகையூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் முழுவதுமாக வழங்கப்பட்டது.

முகையூர் ஒன்றியத்தில் உள்ள 110 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங் கள் வினியோகிக்கும் பணி கள் நேற்று முன்தினம் நடந் தது. காலையில் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் எந்த பாடங்கள் நீக்கப்பட வேண்டும் என குறிப்புகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஆசிரியர்களிடம் பள்ளிகளுக்கான புத்தகங்களும், நீக்கப்பட்ட பாடங்கள் மீது ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்களும் வழங்கினர்.

நீக்கப்பட்ட பாடங்கள் பற்றிய அறிவிப்பு நோட்டீஸ் போர்டிலும் எழுதப்பட்டிருந்தது. எட்டாம் வகுப்பிற்கு முழுவதுமாக பாட புத்தகங்கள் வழங்கவில்லை. அதேபோல் 7ம் வகுப்பு தமிழ், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு கணித பாட புத்தகம் மட்டும் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து நேற்று முகையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us