ADDED : ஜூலை 15, 2011 12:57 AM
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவாமூரில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவாமூரில் நிறுவப்பட்டுள்ள என்.எஸ்.ஆர்.பெட்ரோல் பங்க் திறப்பு விழாவிற்கு பண்ருட்டி நகராட்சி துணை சேர்மன் கோதண்டபாணி தலைமை தாங்கினார். வக்கீல் சாந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். பங்க் உரிமையாளர்கள் ராஜன், முருகன் வரவேற்றனர். பாரத் பெட்ரோலிய மண்டல விற்பனை அதிகாரி பரத்ராஜ் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில், ஹரி ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அசோத்தமன், ஊராட்சி தலைவர் ரீனா மணிவண்ணன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜன், சவுக்கை வியாபாரிகள் சங்க தலைவர் தனபால், கோபாலகிருஷ்ணன், பஷீர்அகமது, அன்பு பங்கேற்றனர்.