நிழல் உலக தாதா சந்தோஷ் ஷெட்டி கைது
நிழல் உலக தாதா சந்தோஷ் ஷெட்டி கைது
நிழல் உலக தாதா சந்தோஷ் ஷெட்டி கைது
ADDED : ஆக 13, 2011 06:10 AM
புதுடில்லி: மும்பை நிழல் உலகின் தாதாவான சந்தோஷ் ஷெட்டி சர்வதேச போலீசார் உதவியுடன் தாய்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளான் போலி பாஸ்போர்ட் மூலம் அவன் தாய்லாந்து நாட்டில் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து தாய்லாந்து போலீசார் உதவியுடன் அவன் கைது செய்யப்பட்டான்.
அவன் மீது 12க்கும் மேற்பட்ட கொலை வழக்கு, ஆள்கடத்தல் வழக்கு, போதை பொருள் கடத்தல் வழக்கு, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. போதை பொருள் கடத்தலில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவனாக திகழ்ந்துள்ளான். பல்வேறு குற்றங்கள் இருந்தாலும் தற்போது போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டு சென்ற வழக்கில் வரும் 17-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.