/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு சீட்டு தயாரிப்பு தீவிரம்உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு சீட்டு தயாரிப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு சீட்டு தயாரிப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு சீட்டு தயாரிப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு சீட்டு தயாரிப்பு தீவிரம்
ADDED : அக் 05, 2011 02:12 AM
பொள்ளாச்சி : உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஓட்டு சீட்டு தயாரிக்கும் பணி
தீவிரமடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சிகளில் போட்டியிடும் மாவட்ட
கவுன்சிலருக்கு தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றிய உறுப்பினர்
தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு
நிறத்திலும், வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும்
ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலை
பொறுத்தவரை, 400 மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள வார்டுகளை ஒன்றிணைத்து
இரண்டு வார்டுகளுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற முறையில் அமைக்கப்படவுள்ளது.
இதுபோன்று அமைக்கும் போது, முதல் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை
நிறமும், 2வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இளம் நீல நிறமும் ஓட்டு
சீட்டு அச்சடிக்கப்படுகின்றன. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தலில்
ஒன்றியங்களில், நூற்றுக்கணக்கானோர் போட்டியிடுவதால் அவர்களின் பெயர்களை
ஓட்டுச்சீட்டில் அச்சடிக்காமல், சின்னம் மட்டுமே இடம்பெறும். ஆனால், இந்த
தேர்தலுக்கு தலா 30 சின்னங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட
கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்
ஓட்டுச்சீட்டுகளின் அளவு, இடம் பெற வேண்டிய தகவல்கள் குறித்து மாநில
தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், 'ஓட்டுச்சீட்டின் முன்
பக்கம் உள்ளாட்சியின் பெயர், வார்டு மற்றும் தேர்தல் நடக்கும் மாதம்,
ஆண்டு, வேட்பாளர்களின் பெயர், ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை இடம்
பெற்றிருக்க வேண்டும். ஓட்டுச்சீட்டின் தொடர் எண்ணை இடது பக்கத்தின்
முன்புறமோ அல்லது பின்புறமோ வசதிக்கேற்ப அச்சிடலாம். ஓட்டுச்சீட்டின் அகலம்
மூன்று அங்குலத்தில் இருந்து நான்கு அங்குலத்திற்கு இடையே இருக்க
வேண்டும். ஓட்டுச்சீட்டின் இடது பக்கத்தில் வேட்பாளரின் பெயர் தமிழிலும்,
வலது பக்கத்தில் சின்னமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும்
ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு 6.5 செ.மீ., அகலமும், இரு வேட்பாளர்களுக்கு
இடையே ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மூன்று செ.மீ., அகலமும், அடிப்புறத்தில் ஒரு
செ.மீ.,க்கு அடர்த்தியான கருப்பு நிறத்தில் கோடும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு சின்னத்தின் அளவும் 9 செ.மீ., நீளமும், 5.5 செ.மீ., அகலத்திற்குள்
இருக்க வேண்டும். ஓட்டுச்சீட்டுகள் பொதுவாக 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக
இருக்க வேண்டும். ஓட்டுச்சீட்டுகளில், குறைபாடுகள் இருந்தால் அதன்
பின்புறம், 'குறைபாடுள்ள, ரத்து செய்யப்பட்ட ஓட்டுச்சீட்டு' என்று எழுதப்பட
வேண்டும். அவற்றை ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடாது. அந்தந்த
ஓட்டுச்சாவடிக்கான அடையாள முத்திரையை அந்தந்த பகுதிக்கான ஓட்டுச்சீட்டின்
பின்புறத்திலும், அடிச்சீட்டிலும் வலது ஓரத்தில் அடையாளம் இட வேண்டும்.
ரப்பர் முத்திரை பழுதடைந்துவிட்டால் ஓட்டுச்சீட்டுகளின் பின்புறம் பேனாவில்
எழுதலாம் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


