/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போலீஸ் ஸ்டேஷன் புது கட்டடம் திறப்பதில் மெத்தனம் : எதிலும் ஆர்வம் இல்லா அதிகாரிகள்போலீஸ் ஸ்டேஷன் புது கட்டடம் திறப்பதில் மெத்தனம் : எதிலும் ஆர்வம் இல்லா அதிகாரிகள்
போலீஸ் ஸ்டேஷன் புது கட்டடம் திறப்பதில் மெத்தனம் : எதிலும் ஆர்வம் இல்லா அதிகாரிகள்
போலீஸ் ஸ்டேஷன் புது கட்டடம் திறப்பதில் மெத்தனம் : எதிலும் ஆர்வம் இல்லா அதிகாரிகள்
போலீஸ் ஸ்டேஷன் புது கட்டடம் திறப்பதில் மெத்தனம் : எதிலும் ஆர்வம் இல்லா அதிகாரிகள்
ADDED : ஆக 11, 2011 12:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு, அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும், பயன்பாட்டுக்கு வரவில்லை.
குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவது போல், ஸ்டேஷன் திறப்பதிலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் அனைத்தும் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இம்மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் நகர் மேற்கு, வேடசந்தூர், விருவீடு, தாடிக்கொம்பு, அம்மையநாயக்கனூர், சின்னாளபட்டி ஸ்டேஷன்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. தாடிக்கொம்பு ஸ்டேஷனுக்கு, கடந்த ஆட்சியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து பல மாதங்களாகிறது. ஏனோ, புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீஸ் நிர்வாகம் அக்கரை எடுக்கவில்லை. புதிய கட்டடத்தை பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன், வாடகை கட்டடத்தில், தாடிக்கொம்பு போலீசார் காலத்தை கடத்துகின்றனர். அம்மையநாயக்கனூர் போலீசாரின் நிலையும் இது தான். புதிய கட்டடம் அப்படியே இருக்க, பாழடைந்த, இடவசதி இல்லாத கட்டடத்தில் பயத்துடன் பணிபுரிகின்றனர். வாடகை கட்டடத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம் கட்டித்தரும் ஆர்வத்தில் அரசு இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் இங்கு உள்ளனர். அரசின் வேகத்திற்கு அதிகாரிகள் ஈடுகொடுப்பது எப்போது?


