/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை டவுனில் குயில் தோப்பு கவிதை நூல் வெளியீட்டு விழாநெல்லை டவுனில் குயில் தோப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா
நெல்லை டவுனில் குயில் தோப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா
நெல்லை டவுனில் குயில் தோப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா
நெல்லை டவுனில் குயில் தோப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா
ADDED : ஆக 30, 2011 12:03 AM
திருநெல்வேலி : நெல்லை டவுனில் 'குயில் தோப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
ஜேஏ,.பதிப்பகம், இலக்கிய உறவுகளும் இணைந்து'குயில் தோப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை டவுன் பெரிய தெரு பாலன் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். கால்வாய் நாராயணன், கவிஞர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் நடராஜன் வரவேற்றார். சங்கர மூர்த்தி இறைவணக்கம் பாடினார். கவிஞர் ஜெயபாலனின்'குயில் தோப்பு' நூலினை டாக்டர் பரமசிவம் வெளியிட மருத்துவ கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் செல்லப்பா பெற்றுக்கொண்டார். நூல் விமர்சனம் குறித்து பாரதிமாறன் பேசினார். நெல்லை வானொலி நிலைய இயக்குனர் சோமாஸ் கந்தமூர்த்தி, பொருநை இலக்கிய வட்டம் தளவாய் ராமசாமி, பொதிகை கவிஞர் மன்றம் மித்ரா வள்ளிமணாளன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வானம்பாடி சங்கர், கீதாலயம் கவிதை வளர்ச்சி அமைப்பு கண்ணன், தாமிரபரணி இலக்கிய மாமன்றம் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர். சிறந்த கவிதைக்கான பரிசினையும், சான்றிதழ்களையும் லயன்ஸ் மாவட்ட தலைவர் ஜானகிராம் அந்தோணி வழங்கினார். நிகழ்ச்சிகளை வாசுகி வளர்கல்வி மன்றம் மணி தொகுத்து வழங்கினார். கவிஞர்கள் சார்பில் பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். கவிஞர் தச்சை மணி நன்றி கூறினார்.