Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதல் இடம் : மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதல் இடம் : மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதல் இடம் : மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதல் இடம் : மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்

ADDED : செப் 21, 2011 11:15 PM


Google News
Latest Tamil News
கோலாலம்பூர்: 'இந்தியாவின் ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மலேசியா வாழ் இந்தியர்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்க வேண்டும்' என, மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் தற்போது, 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 7.8 சதவீதம் உள்ள இந்தியர்கள் சார்பில், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று பேட்டியளித்த அக்கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் கூறியதாவது: இந்திரா மற்றும் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலங்களில், இந்தியாவின் ஐ.ஐ.டி., எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க, மலேசிய இந்தியர்களுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது, அந்த இடங்கள் மிகவும் குறைக்கப்பட்டு விட்டன.

கல்வித் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய அரசு பல்வேறு விதங்களில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். சர்வதேச கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகைக்கும் இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், இந்தியாவில் உட்கட்டமைப்புப் பணிகளில் மலேசிய இந்திய நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம் 1 சதவீதமாவது ஒதுக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போதெல்லாம், இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. பிரவாசி பாரதிய கூட்டங்கள் பெருமளவில் நன்மை செய்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய தலைப்பில் விவாதிப்பதோடு மறந்து விடுகின்றனர். பிரவாசி பாரதிய அமைப்பு ஒரு பெரிய சர்க்கசாகத் தான் தோன்றுகிறது. இவ்வாறு பழனிவேல் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us