ADDED : ஜூலை 25, 2011 02:06 AM
வால்பாறை : ஆளும் கட்சியாக இருந்தும் வால்பாறையில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க.,கொடிகள் திடீர் மாயமானதால் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் சட்ட சபை தேர்தல் நடந்ததையடுத்து, தேர்தல் கமிஷன் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்துக்கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன.இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க.,வெற்றி பெற்று இரண்டு மாதமான நிலையிலும் வால்பாறை டவுன் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் அ.தி.மு.க.,கொடி கம்பங்கள் காணவில்லை. தி.மு.க.,வினர் மட்டும் தேர்தல் முடிந்த பின்னர் பல இடங்களில் கொடி கம்பங்களை வைத்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.,வினர் கொடிக்கம்பம் மட்டும் பல இடங்களில் காணவில்லை.டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அ.தி.மு.க.,வின் கொடி பறக்காதது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.