/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ADDED : செப் 01, 2011 09:01 PM
கீழக்கரை : கீழக்கரையில் கிழக்கு தெரு,வடக்குதெரு,நடுத்தெரு,மேலத்தெரு, புதுத்தெரு, பழைய குத்பா பள்ளி மற்றும் ஏர்வாடி, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், பெரியபட்டினம், தினைக்குளம், மாயாகுளம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும்,மத நல்லிணக்கம் தொடர சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மண்டபம் ஒன்றிய மீனவர் அணி துணை செயலாளர் அப்துல்லா, தொகுதி செயலாளர் முருகேசன், கீழக்கரை முன்னாள் நகராட்சி துணை தலைவர் முகம்மது உசேன், முன்னாள் அ.தி.மு.க.,இளைஞர் அணி செயலாளர் இம்பாலா சுல்த்தான் செய்யது இபுறாகிம், மாணவர் அணி தலைவர் சித்திக், ஜெ.பேரவை செயலாளர் சாதிக் அலி, மேலமைப்பு பிரதிநிதி நூருல் அமீன், அ.தி.மு.க.,ஒன்றிய நிர்வாகிகள் கணேசன், முனியாண்டி, ஊராட்சி தலைவர்கள் குணசேகரன் (ஏர்வாடி), மாரியம்மாள் (தினைக்குளம்), காஞ்சிரங்குடி ஊராட்சி துணை தலைவர் முகப்பத்துல்லா, புல்லந்தை அ.தி.மு.க., செயலாளர் பாக்கியநாதன், ஜோதி மணி, சிங்காரவேலு, அம்புரோஸ், சார்லஸ், பாலையா வி.ஏ.ஓ., சங்கர், சோமு,மோகன்,வேணு,பாலாஜி, முகம்மது கபிபுல்லா, சுகாதார ஆய்வாளர் முகம்மது அனீஸ், புருசோத்தமன், சியாம், மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா, வாசுதேவன், ராமச்சந்திரன், சிட்டி யூனியன் வங்கி மேலாளர்கள் பிரபாகரன்(ராமநாதபுரம்), சுப்பிரமணியன் (கீழக்கரை), எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணை தலைவர் கருணாகரன், மாவட்ட தொகுதி தலைவர் பைரோஸ்கான், சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு காங்கிரஸ் தலைவர் அன்பு செழியன், வக்கில் சங்க மாவட்ட செயலாளர் அர்சாத் ஹூசைன், டாக்டர் சாதிக் அலி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தவசிமணி,மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் அப்துல் முனாப், கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் முருகன் இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.