/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்
போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்
போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்
போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்
ADDED : ஆக 01, 2011 02:27 AM
உடன்குடி : குலசேகரன்பட்டணம் அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் மூன்றரை பவுன் தங்க செயினை அபகரித்துச் சென்ற இரண்டு டிப்டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, குலசேகரன்பட்டணம்-திருச்செந்தூர் ரோட்டில் பகத்சிங்புரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார் சுப்பு மனைவி ஞானப்பூ(65).
சம்பவத்தன்று காலை இரண்டு டிப்டாப் வாலிபர்கள் டிபன் சாப்பிட வந்ததாக தெரிகிறது. திடீரென தாங்கள் போலீஸ் எனக் கூறி வீட்டில் மது விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. வீட்டை சோதனை போட வேண்டும் எனக் கூறி வீட்டில் பீரோவில் இருந்த 3 1/2 பவுன் நகையை எடுத்துக் கொண்டு இரண்டு வாலிபர்களும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்டாப் வாலிபர்கள் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.